கொஞ்சம் கொஞ்சமாய் காதல் சாரல் - பகுதி 11
விமல் கேபினை விட்டு வெளியேறியவுடன் சுஜி மீண்டும் அவளின் கைப்பேசியை எடுத்தாள். அட்லஸை அழைத்தாள். இப்போது லைன் நன்றாகவே கிடைத்தது.
மறுமுனையில் சோம்பல் முறித்து தூக்கம் களையா கண்களோடு அலறிய போனை எடுத்து காதில் வைத்து ம்ம்ம்ம் கொட்டினான் அட்லஸ்.
அட்லஸ்: ம்ம்ம்ம்...
சுஜி:கிறுக்.....கா... இவ்வளவு நேரமாவா தூங்குவே? எழுந்திரிடா எரும மாடு!
அட்லஸ்:ம்ம்ம்....முடியாது போடி.
சுஜி: உன்னே எப்படி எழுந்திரிக்க வைக்கணும்னு எனக்கு நல்லாவே தெரியும்..
என்று சொல்லி அவளின் ஹேண்ட்ஸ பிரி வழி அவனுக்கு முத்தம் வைக்க, அவன் கொஞ்சினான்;
அட்லஸ்: எங்கடி இருக்க? அங்கே இருந்து குடுக்கற, இங்க வந்து குடு..
சுஜி:ஹ்ம்ம் உனக்கு போய் ராத்திரிலாம் கதறி கதறி டைப் பண்ணேன் பாரு என்னே சொல்லணும், இனி நீ ஒரு மெசேஜும் படிக்க வேண்டாம், ஓடியோஸ் கேட்கவும் வேணாம். நான் எல்லாத்தையும் இப்பையே சொல்லிடறேன்.
அட்லஸ்:என்னடி, ஆண்டி.. சொல்லுடி
மீண்டும் கிண்டலடித்தான். சுஜி விளையாட்டு கோபம் கொண்டாள் அவன் மீது.
சுஜி:ஆண்டியா ? கொன்னுருவேன் உன்னே. ஆண்டியா, ஆண்டி சரி சரி நா போன் வெச்சிட்டு போறேன். பாய்..
அட்லஸ்: ஏய், ஆண்டி போகாதடி...ஐ லவ் யூ டி ஆண்டி...
சுஜி:அட்லஸ், நான் ஐஸ்லாந்துக்கு வெகேஷன் போய்கிட்டு இருக்கேன்.
அட்லஸ்: ஐஸ்லண்டா ?
தூக்கம் கலைந்தான் அட்லஸ்.
சுஜி: ஆமா. நானு, நிமல், விமல் ஏட்டா இன்னும் கொஞ்ச பேர்.
அட்லஸ்: சொல்லவே இல்லே..
சுஜி: அதுக்குதான் நேத்து நைட் அவ்ளோ நேரம் உனக்கு கால் பண்ணேன். நீ போன் எடுக்கவே இல்லே.
அட்லஸ்: சோரி டி பாப்பா, அசதில தூங்கிட்டேன். எப்போ வருவே ?
சுஜி: அஞ்சி நாள் கழிச்சி...
அட்லஸ்: அஞ்சி நாளா ?
சுஜி: ஆமாம், அஞ்சி நாள். உன்னே பார்க்க முடியாது, சரியா பேச முடியாது, உன் கன்னத்தை கிள்ள முடியாது, உன் கண்ணை பார்த்துகிட்டே இருக்க முடியாது, உன் கையிலே சாஞ்சிகிட்டு பாட்டு கேட்க முடியாது...
சொல்ல சொல்ல சுஜியின் கண்களில் கண்ணீர் வழிந்தது. அட்லஸ் அவனின் வீடியோ காலை ஆன் செய்தான். அவன் முகத்தை காட்டாதவாறு அவளை மட்டுமே பார்த்தேன்.
அட்லஸ்: பாப்பா, அழதடி... பிளீஸ்... இப்போ என்னாச்சி? நான் எங்க போய்டேன்? இங்கதான் இருக்கேன் ? நீ எப்போ வேணும்னாலும் எனக்கு கால் பண்ணலாம். நாம பேசலாம் சரியா.
தேம்பி தேம்பி கதறியவளை சமாதானம் செய்தான் அட்லஸ். சுஜிக்கு அழுதாள் முகமெல்லாம் வீங்கி விடும். பார்ப்பவர்களுக்கு சொல்லவே வேண்டாம். அவள் முகமே காட்டி கொடுத்துவிடும்.
சுஜி:இதுக்குதான் , நைட் எல்லாம் கால் பண்ணேன். நீ எடுத்தா தானே. உனக்கு தூக்கம்தா முக்கியம் . தூங்கிட்டே.
அட்லஸ்: என்னடி, தொங்கிடேன் மாதிரி தூங்கிட்டேன் சொல்றே...
அவளை சிரிக்க வைக்க முயற்சித்தான் அட்லஸ்.
அட்லஸ்: பாப்பா.. இங்க பாரு. இங்க பாரு, ஐ லவ் யூ. ஊர் சுத்தி பார்க்க போறே, ஜாலியா போய்ட்டு சந்தோசமா திரும்பி வா. நான் சுஜியோடே அட்லஸ்..
அவன் சொல்லும் போது, இல்லை என தலையாட்டியவளை பார்த்து புன்னகைத்த வண்ணம், மீண்டும் தொடர்ந்தான்.
அட்லஸ்: சுஜியோடே ஷெரிப். என்ன யாராலயும் உன்கிட்ட இருந்து பிரிக்க முடியாது. நான் உனக்குத்தான். எப்போதுமே. போய்ட்டு வா. டைம் இருக்கும் போது கால் பண்ணு. கண்ட நேரத்துல கால் பண்ணி மாட்டிக்காத. உன் ஆள் வந்துட போறாரு. போன் வை.
சுஜி அவனின் பேச்சை கேட்பதாய் இல்லை. அந்த வீடியோ காலில் அவளின் உதட்டை குவித்து அவனுக்கு முத்தம் தருவது போல் செய்கை செய்தாள்.
அட்லஸ்: கம் ஒன், பாப்பா... போடி. காலையிலே என்ன.... போடி... ஐ ஹெட் யூ ...
இருவரும் கொஞ்சி பேசிக் கொண்டிருக்கும் போது கேபின் கதவை யாரோ திறக்க முயல்வது தெரிந்தது. சுஜி உடனே காலை கட் பண்ணி விட்டு, தூக்கத்தில் இருந்து எழுந்து வந்தவள் போல் அவளின் கண்களை தேய்த்துக் கொண்டு கேபின் கதவை திறந்தாள். நிமலன் தான் எதிரே.
நிமலன்: தூங்கிகிட்டு இருக்கியா நீ.. சரி, சரி நீ தூங்கு.
சுஜியும் தூங்குவது போல் நடிப்பதற்காக கட்டிலில் சாய்ந்தாள் பின்பு அப்படியே உறங்கியும் போனாள்.