கொஞ்சம் கொஞ்சமாய் காதல் சாரல் - பகுதி 12

சுஜியை அழ வேண்டாம் என்று சொல்லி விட்டு தலையில் கை வைத்து குடி முழுகியது போல் அமர்ந்திருந்தான் அட்லஸ்.

ஆம். அவளுக்கு தைரியம் சொல்ல தெரிந்தவனுக்கு இவனை அடக்கி கொள்ள முடியவில்லை. போனையே நொடிக்கு ஒருதரம் எடுத்து எடுத்து பார்த்தான்.

அவள் அனுப்பி இருந்து அத்தனை மெசேஜ் மற்றும் ஆடியோக்களை கேட்டான், சுஜி கேட்க வேண்டாம் என்று சொல்லியும். மனம் கேட்கவில்லை.

கட்டிலில் புரண்டிக் கொண்டே அவள் மீது தனக்கிருக்கும் இந்த பைத்தியத்திற்கு காரணமான அந்த விஷயத்தை நினைத்து பார்த்தான்.

அது அவர்களின் கம்பனி எனுவல் டின்னர்கான விருந்து ஏற்பாடு. பலரும் குடும்பத்துடன் கலந்து கொள்ளும் நிகழ்வது. மிகப் பெரிய ஹோட்டல் ஒன்றில் அந்த விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அங்கு நிமலனை தெரியாதவர்கள் இருக்கவே முடியாது. உண்மையை சொல்லப் போனால் சுஜி இப்படி வேலை செய்ய வேண்டிய அவசியமே இல்லை.

இருந்தும் அவளுக்கு பிடித்து இருக்கிறது என்பதற்காகவே அவளின் இச்செயலுக்கு அமைதியாக இருந்தான் நிமலன்.

பெரிய பெரிய பங்குதாரர்கள் அங்கு வந்திருந்த நிமலனிடம் கை குலுக்கி மிக சகஜமாய் பேசினர் வியாபாரத்தை பற்றி. அங்கு சுஜியும் இருந்தால் நிமலனுடன்.

நிமல் சுஜியின் கரங்களை பற்றியபடியே புதியவர்களிடத்தில் அவளை அறிமுகம் செய்து வைத்தான். அட்லஸ் இதையெல்லாம் தேநீர் அருந்திக் கொண்டே பார்த்துக் கொண்டிருந்தான் கம்பிகளில் சாய்ந்தவாறு.

அவனுக்குள் ஏதோ ஒரு விதமான கோவம். ஆம். அவனுக்கு பிடிக்கவில்லை. சுஜியின் கரங்களை நிமலன் பற்றியிருப்பது அவனுக்கு பிடிக்கவில்லை.

வைத்த கண் வாங்காமல் அதையே முறைத்து பார்த்துக் கொண்டிருந்தான். அவன் அப்படி நடந்து கொள்வது அனைவருக்கும் வெளிப்படையாகவே தெரிந்தது.

அதாவது அவனுக்கு ஏதோ ஒரு கோபம். ஆனால், யார் மீது எது மீது என்று தான் மற்றவர்களால் அறிந்துக் கொள்ள முடியவில்லை.

அட்லஸின் அந்த கோபமான பார்வையின் தாக்கத்தை சுஜியினால் நன்றாக புரிந்துக் கொள்ள முடிந்தது. நிமலன் கைகள் அவள் கரம் பற்றி இருப்பது அவளுக்கும் என்றைக்குமே இல்லாமல் இன்றைக்கு கொஞ்சம் அசௌரியமாகவே இருந்தது.

ஆம். அட்லஸ் தான் அதற்கான காரணம். அவனின் மீது அவளுக்கு இருக்கும் அந்த காதல் தான் காரணம்.

கைகளை விடுவிக்கவும் முடியாமல் அட்லஸை அப்படி பார்க்கவும் முடியாமல் வேதனையில் தவித்தாள் சுஜி.

அவளுக்கு அவள் முகம் தான் எமன். முகத்திலே தெரிந்தது அவளின் அந்த கலக்கமும் வேதனையும்.

சுஜி அன்றைக்கு அணிந்திருந்த அந்த பால் மஞ்சள் கலந்த பிங்க் சாரி அவளுக்கு மிகவும் எடுப்பாக இருந்தது. அவள் அணிந்திருந்த அந்த சின்ன வைர சங்களி அவள் கழுத்தை அழகாக அலங்கரித்திருந்தது.

காற்றில் பறந்து விருந்து ஆடிய அவளின் கேசத்தின் ஓரம் இருந்த காதில் அவள் அணிந்திருந்த அந்த வெள்ளை ஜிமிக்கி அட்லஸை அதற்காகவே அவளை இன்னொரு முறை ரசிக்க சொல்லியது.

கைகளின் கண்ணாடி வளையல்கள். ஒரு மார்க்கமான அழகாகவே அன்றைக்கு காணப்பட்டாள் சுஜி.

சுஜி நாளுக்கு நாள் அழகாகிறாள் என்று மற்றவர்கள் சொல்ல அதற்கேற்றாற் போல் நிமலன் அவள் கன்னத்தில் முத்தம் ஒன்றை வைத்தான்.

அந்த சந்தோச சிரிப்பின் இடையில் திடீரென கண்ணாடி பாட்டில் நொறுங்கிய சத்தம் கேட்டது.

தொடரும்....

எழுதியவர் : தீப்சந்தினி (3-Oct-19, 11:55 pm)
சேர்த்தது : தீப்சந்தினி
பார்வை : 132

மேலே