கொஞ்சம் கொஞ்சமாய் காதல் சாரல் - பகுதி 13

தூரத்தில் அட்லஸின் கையில் அந்த நொறுங்கிய பாட்டில் ரத்த வெள்ளத்தில்.கையில் ரத்தம் சொட்ட சொட்ட. அடுத்த நொடி சுஜி அவனருகில். மற்றவர்களும் அவனுக்கு தேவையான முதலுதவி வழங்கினார். சுஜி மேஜையின் மீது இருந்த உணவருந்தும் கைக்குட்டையை எடுத்து அவன் கைகளில் கட்ட, அதை உதறி தள்ளி அங்கிருந்து அனைவரிடத்திலும் விடை பெற்று சென்றான் அட்லஸ்.

நிமலனும் சுஜியின் நடவடிக்கைகளை பார்த்துக் கொண்டே தான் இருந்தான். அவள் ஒரு எச். ஆர்.எம் கண்டிப்பாக மற்றவர்களின் நலனில் அக்கறை உள்ளவள். அதுவும் இது இவள் கம்பனியின் விருந்தில் ஏற்பட்ட அசம்பாவிதம் எப்படி அவள் கண்டுக் கொள்ளாமல் இருக்க முடியும்.

சுஜி அவனை அப்படியே பின் தொடர முடியாது, என்பதால் கை கழுவி விட்டு வருவதாக கூறி வேகமாய் கார் பார்க் நோக்கி நடந்தாள் அட்லஸை காண. அட்லஸ் காரை சாரமாரியா ட்ரிப் செய்வது அவளுக்கு நன்றாகவே தெரிந்தது. சத்தம் காதை பிளந்தது. அவன் காரின் முன் சென்று நின்றவளை,

அட்லஸ்: போடி !

சுஜி: அட்லஸ்...

அட்லஸ் : போடி !! போய் அவன் கூடையே இளிச்சிக்கிட்டு நில்லு !

ஆத்திரத்தோடு சொல்லியவன் விருட்டென அங்கிருந்து கிளம்பினான். கனத்த இதயத்தோடு கதறி அழுதாள் சுஜி. அங்கேயே அப்படியே அதே கார் பார்க்கில் கீழே அமர்ந்து. கையில் இருந்த அலைபேசி அலறியது. நிமலன் தான், அவளை தேடி.

விருந்து ஒரு வழியாய் முடிந்து அனைவரும் கிளம்பும் முன் சுஜியும் நிமலனுடன் கிளம்பினாள். வீட்டிற்கு அல்ல, உல்லாச பயணத்திற்கு. விடுமுறை நாட்கள் எல்லாமே நிமலனுக்கு எங்காவது சுஜியை அழைத்து சென்றிட வேண்டும். அது போல் இம்முறை கோலாலும்பூரிலிருந்து

அது போல் இம்முறை கோலாலும்பூரிலிருந்து போர்ட்டிக்சனுக்கு அவர்களது பயணம் ஆயொத்தமானது. ஏறக்குறைய ஒன்றை மணி நேர பயணம் அது. இருந்தும் அந்த பி.எம். காரின் வேகத்திற்கு அந்த ஓட்டமெல்லாம் சர்வ சாதாரணம். குறைந்த பட்சம் 45 நிமிடங்களில் சென்று விடலாம். இன்னும் சொல்லப் போனால் ஓட்டுனரின் வேகத்தை பொறுத்து இன்னும் சீக்கிரமாகவே சென்றுவிடலாம்.

போர்டிக்சனை, பீ.டீ. என்றுக் கூட மலேசியா மக்கள் செல்லமாக அழைப்பார்கள். கடற்கரையை சூழ்ந்துருக்கும் அது ஒரு அழகிய தீவாகும். ரோட்டின் ஓரம் அங்கு இருக்கும் அந்த அனுமன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. சுற்றுப்பயணிகளும் தவறாமல் வந்து வணங்கி செல்வர்.

நேராக கட்டப்பட்டிருந்த அந்த ஹனுமன் சிலை ஒரு நாள் எதிரே இருக்கும் கடற்கரையை பார்த்தப்படியே திரும்பி இருப்பதை கண்டு அங்கிருக்கும் மக்கள் அனைவரும் அதிர்ச்சியுற்றனர். பிந்தைய காலத்தில் மலேசியாவின் ராணுவ வீரர்களால் கட்டப்பட்ட அந்த ஹனுமன் கோவில் மக்களால் இரவு சூழும் முன் வணங்கி செல்ல வேண்டும் என்ற கோற்பாடில் அமைந்திருந்தது. ஆம். சுற்றி காடு. எந்தவொரு அடிப்படை வசதியுமற்ற பொத்தல் காடு அது. சூரியனின் கதிர் வீச்சே அப்போதைக்கு இக்கோவிலின் வெளிச்சம்.

வருவோர் போவோர் வீற்றிருக்கும் அனுமனுக்கு அசைவம் உணவுகள் மற்றும் மதுபானங்கள் சமர்ப்பிக்க அதன் விளைவாகவே அனுமன் அது பிடிக்காமல் தன்னை முழுதாய் கடல் பக்கம் பார்க்குமாறு திருப்பிக் கொண்டதாக வரலாறு கூறுகிறது.

அதை தாண்டி இன்னொரு சங்கதியும் வழக்கில் உள்ளது. அதாவது உலக வரைபடத்தின் மூலமாக பார்த்தால், இந்த போர்டிக்சன் தீவிற்கு எதிரே அப்பால் நேர் எதிராக அமைந்திருப்பது ஸ்ரீ லங்காவாகும். ஆதலால், மக்கள் ஹனுமன் ஸ்ரீ லங்காவை நோக்கி பார்ப்பதாகவும் வழக்கத்தில் சொல்கிறார்கள்.

எவிலியன் ஹோட்டலில் தங்குவதற்கான ஏற்பாட்டை ஏற்கனவே அவன் நண்பர்கள் செய்து வைத்திருந்தனர். அவர்கள் அங்கு மதியமே புறப்பட்டு போயாயிற்று. சுஜியின் கம்பனி விருந்தின் காரணமாகவே நிமலனும் சுஜியும் விருந்து முடிந்து இன்றைய இரவு கிளம்ப வேண்டிய சூழ்நிலை.

போகும் வழியில் நெடுஞ்சாலைகளில் ஓய்வெடுப்பதற்காகவே கட்டப்பட்டிருக்கும் ஓய்வு விடுதியில் ஆடைகளை மாற்றிக் கொண்டாள் சுஜி. அப்போதும் மறக்காமல் அட்லசுக்கு கால் செய்தாள். பலனில்லை. அவன் எடுக்கவில்லை. அவள் மீது கோபத்தில் இருக்கிறான் என்று அவளுக்கு புரிந்தது.

அவனை இப்போது பார்க்க வேண்டும் போல் இருந்தது அவளுக்கு. ஆனால், அது எப்படி சாத்தியமாகும். மனதை தேத்திக் கொண்டு மீண்டும் நிமலுடன் அவளின் பயணத்தை தொடர்ந்தாள் போட்டிக்சனுக்கு.

தொடரும்...

எழுதியவர் : தீப்சந்தினி (4-Oct-19, 8:11 am)
சேர்த்தது : தீப்சந்தினி
பார்வை : 120

மேலே