கொஞ்சம் கொஞ்சமாய் காதல் சாரல் - பகுதி 14

இம்மாதிரியான உல்லாச பயணங்களின் போது, நிமலனேதான் கார் ஓட்டுவான். அவனின் கார் ஓட்டுனருக்கு வழக்கமாகவே ஓய்வு அளித்து விடுவான். அன்றைக்கும் அவனே ஓட்டினான். ஒருவழியாய், இருவரும் நண்பர்கள் கூடாரம் போட்டு உல்லாசமாய் ஆட்டம் போட்டுக் கொண்டிருந்த கடற்கரை பகுதிற்கு வந்து சேர்ந்தனர்.

நிமலனும் அவர்களுடன் சேர்ந்து ஜாலியாக அரைட்டை அடிக்க ஆரம்பித்தான். சுஜிக்குத்தான் அங்கு ஒன்றுமே நகரவில்லை. ஆம்.அவளின் எண்ணம் முழுக்க அட்லஸ் மீதே இருந்தது. கண்ணில் வழியும் கண்ணீருக்கு பொய்யான தலைவலியை காரணம் காட்டினாள்.

நிமலன்: பாப்பா, நாம ரூம் போலாமா? நீ அங்கே படுத்து தூங்கு சரியா..

சுஜி: நீங்களும் வரிங்களா?

நிமலன்: நானும் தான்... நாம கிளம்பலாம். அவுங்க மெதுவா வரட்டும் சரியா.

சுஜி: இல்ல, நிமல். நாம இங்கேயே இருக்கலாம். ஒன்னும் பிரச்சனை இல்ல.

நிமலன்: வேணா, பாப்பா. உனக்கு வேற ஒரே தலைவலியா இருக்குனு சொல்றே. நாம கிளம்பலாம்.

அப்போது விமல் இருவரின் பேச்சு வார்த்தையின் நடுவே இடைமறித்தான்.

விமல்: சுஜி, நீ வேணும்னா ரூம்கு போய் ரெஸ்ட் எடு. இவன் இங்க இருக்கட்டும். ஓகே தானே?

நிமலன்: இல்லடா மச்சான், நானும் போறேன்.

விமல்: நிமல் விடுடா. அவ நல்ல படுத்து தூங்கட்டும். நீ வேணும்னா அவள போய் விட்டுடு வா.

சுஜி: எதுக்கு இப்போ அலைச்சல். நானே போயிடுறேன். எவ்ளோ தூரம் இங்க இருந்து பத்து நிமிஷ ஓட்டம். அதுக்கு எதுக்கு ஒரு ஆள் வந்து போயி..

விமல்: ஆமா, ஆமா.. உண்மைதான். சுஜி அப்போ நீ முதல்ல கிளம்பு.

நிமலன்: பாப்பா, நீ போய்டுவேதானே ? இல்ல நான் வரணுமா ?

கரிசனமாய் கேட்டவனை கட்டியணைத்து விட்டு, அனைவரிடத்திலும் விடை பெற்று காரில் ஏறி அமர்ந்தாள் சுஜி. மீண்டும் கைப்பேசியை எடுத்தாள். அட்லஸை அழைத்தாள். அவன் எடுப்பதாயில்லை. இவள் விடுவதாயில்லை.

கொஞ்ச நேரம் கண்களை இருக மூடினாள். பெரு மூச்சு ஒன்றை இழுத்து விட்டாள். கட்டப்படாத அவளின் கூந்தலை அள்ளி முடிந்தாள். காரின் முன் கண்ணாடியை சரி பார்த்தாள். காரில் பெட்ரோலின் அளவை சரி பார்த்தாள். எடுத்தாள் காரை புயல் வேகத்திற்கு. அந்த பி.எம். கார் காற்றை கிழித்து பறந்தது சாலையில்.

போகும் வழியில் அவளின் தோழி எமியை அழைத்தாள்.

எமி எங்கோ வெளியில் இருந்தால் போலும். ஒரே சத்தம். போனை எடுத்தவள் கேட்டாள்.

எமி: என்னடி, இந்த நேரத்துல?

சுஜி: எமி, எங்க இருக்க நீ ? ஏன் ஒரே சத்தமா இருக்கு ?

எமி: சனிக்கிழமையாச்சே அதான் சாப்பிட வெளியே வந்தேன், புக்கிட் பிந்தாங்க்கு. இங்க எல்லாம் தண்ணி அடிச்சிக்கிட்டு கத்திக்கிட்டு கிடக்குதுங்கு அதான் ஒரே சத்தம்.

சுஜி: எதோ ஒரு கன்றாவி, நான் சொல்றதே நல்ல கேளு. நான் நிமல் கூட பீ.டி. போய்ட்டேன். ஆனா, இப்போ அங்க இருந்து திரும்ப கோலாலும்பூருக்கு திரும்பி வந்துகிட்டு இருக்கேன்.

எமி:ஏண்டி, உனக்கு நிமலுக்கும் மாட்டிக்கிச்சா ?

சுஜி: அதலாம் ஒன்னும் இல்ல. நான் உன் கூடத்தான் வந்துருக்கேன்னு சொல்லி வெச்சிருக்கேன். ஆபீஸ் வேல. அர்ஜன்ட். சோ, உனக்கு கால் பண்ணா தயவு பண்ணி என்னை காப்பாத்து.

எமி: அதெல்லாம் சரி. ஆனா, நீ இப்போ எதுக்கு திரும்ப இங்க வர ?

சுஜி: வந்து சொல்றேன். பாய்... சொதப்பிடாதா.

ரிசீவரை வைத்தவள் நன்றாக மீண்டும் ஒருமுறை அவளின் பிளானை யோசித்தாள். அவள் காரில் ஏறி அமரும் முன்னே நிமலனின் போனை ஆப் செய்து அவனுக்கே தெரியாமல் அவன் பாக்கெட்டில் வைத்து விட்டாள்.

ஒரு கால், அவளை தேடி அவன் ஹோட்டல் அறைக்கு சென்று அவளை காணவில்லை என்றால் அவனுக்கு அழைத்து கிடைக்கவில்லை எனவும். எமி கூடத்தான் ஆபிஸ் வேலையாக சென்று இருக்கிறேன் என தகவல் ஏற்கனவே வாட்ஸாப்பின் மூலம் தெரிவித்து விட்டதாகவும் சொல்லி விடலாம் என்று யோசித்து வைத்து இருந்தாள்.

அதாவது. ஹோட்டல் அறைக்கு சென்ற சுஜிக்கு எமியிடமிருந்து அழைப்பு வந்து ஆபிசுக்கு சுஜி அவசரமாக போக வேண்டிய சூழ்நிலை. சுஜி சொல்ல வேண்டியே கதையை நன்றாக ரெடி செய்து வைத்திருந்தாள். எமியையும் அதற்கு தயார் படுத்தி விட்டாள்.

இதுவெல்லாம், அப்படி ஒரு கால் அவள் திரும்பி வர நேரம் ஆகி விட்டாள், இந்த பிளானைத் தான் செயல்படுத்த வேண்டும் என்றிருந்தாள்.

தொடரும்...

எழுதியவர் : தீப்சந்தினி (4-Oct-19, 8:46 am)
சேர்த்தது : தீப்சந்தினி
பார்வை : 154

மேலே