பக்கிப் பயல்

என்னம்மா கோவமா இருக்கிற?
@@@@@@@
உந் தம்பி எங்கடா போனான்? காலையில இருந்து அவனைக் காணோம்.
@@@@@@
நானும் அவனை பாக்கில்லம்மா.
@@@@@@
வரட்டும். அந்தப் பக்கி பயல். அவந் தோலை உரிச்சு உப்புக்கண்டம் போடறேன்.
@@@@@@
அம்மா, அம்மா. இனிமே 'பக்கி'ப் பயல்'ன்னு சொல்லாத.
@@@@
ஏன்டா கோவம் வந்தா வழக்கமா நான் திட்டற வார்த்தைகளச் சொன்னா என்னடா தப்பு?
@@@@@@
நம்ம வீட்டுக்கு எதிர் வீட்டுக்கு யாரு குடி வந்திருக்கிறாங்கன்னு தெரியுமா?
@@@@@@
ஏந்? தெரியுமே. இந்தி பேசறவங்க வந்திருக்கிறாங்க.
@@@@@@
அவுங்க பையன் பேரு பக்கி (Buggi = dust, ashes). அவுங்க பொண்ணோட பேரு பயல் (Payal = anklet). அந்தப் பொண்ணை 'பாயல்'னும் கூப்படறாங்க. இனிமே நீங்க 'பக்கி பயல்'னு சொல்லாதம்மா.
@@@@@@
போடா வேலையைப் பாத்துட்டு. அவுங்க பொண்ணும் பையனும் நாங் கூப்படறதா நெனச்சிட்டு வந்தா அவுங்களுக்கு நான் புரிய வைக்கிறேன்.

எழுதியவர் : மலர் (4-Oct-19, 8:12 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 84

மேலே