விடியட்டும் என் இரவுகள்

என்னில் எனைத் தின்று
விரைவாய் வளரும்
உன் நினைவுகளை
மறக்க வழிதேடுகிறேன்
தினமும்…
என் விடியா இரவுகளில் …

அழுதே வற்றிய
என் விழிகளும்
உன் பெயர் சொல்லியே
ஓய்ந்த என் உதடுகளும்
உன் காதலையே
சுவாசித்த என் இதயமும்
இறுதியாய் காத்திருக்கின்றன
உன் வரவிற்காய்…

உனக்குள் ஈரமிருந்தால்
ஒருமுறை எனைசந்தித்து
நீ எனை மறந்தது போல்
உனை மறக்க வழிதனை
சொல்லிவிட்டுப்போ . . .

விடியட்டும் என் இரவுகள்…

எழுதியவர் : சகாய டர்சியூஸ் பீ (5-Oct-19, 5:28 am)
சேர்த்தது : சகாய டர்சியூஸ் பீ
பார்வை : 297

மேலே