பூவுலகின் பேரழகி 2

அழகே
நீ அன்னையின்
கருவறையில்
பிறக்காது
ஊத்துக்குளி வெண்ணையின்
கருவறையில் பிறந்தாயோ

மெய்யென்று 50 கிலோ
நெய்யை வைத்துள்ளாய்

வெளியே வரும்போதெல்லாம்
உருகவும் செய்கிறாய்
என்னை
உருக்கவும் செய்கிறாய்

சந்திராயன் தரை
இறங்கி இருப்பது
உன் வீட்டு வாசலில்
இதை அறிந்தவன் ஈசியாக
ஞானி ஆகிறான்

இதை அறியாதவன்
இஸ்ரோவில்
விஞ்ஞானி ஆகிறான்

உன் பெற்றோர்
இன்னுமா கைது
செய்யப்படவில்லை
வீட்டில் 18 வருடமாய்
மயில் வளர்த்க்
குற்றத்திற்காக

வானதியே
காயும் என்
இதய நிலத்தில்
காதல் பூக்களை
அறுவடை செய்ய
வா நதியே

ஹேமாவே
உன் தந்தை
ஆகவேண்டும் என் மாமாவே
இல்லை என்றால்
நான் ஆகிவிடுவேன் கோமாவே
என்னை காதலிக்காததுபோல்
போடாதே டிராமாவே

நீ தீபாவளியில் பிறக்காது
அழகெனும் தீப ஒளியில்
பிறந்த பலகாரம்
நீ இளங்கோ உருவாக்காது
என்னை இளம் கோவாய்
உருவாக்கிய சிலப்பதிகாரம்

கண்ணே நீ என்ன
தேசிய கீதமா
உன்னைக் காணும்
போதெல்லாம்
என்னை மறந்து எழுந்து
நிற்கிறேன்

அன்பே நீ
காதலனும் கணக்குப் பாடத்தை
எண்கள் கொண்டு நடத்தாது
உன் இரு கண்கள் கொண்டு
சாலையில் நடத்தும்
பாடசாலை

நானோ உன் மனச்சிறையை
செங்கோட்டையனாய்
ஆள விரும்பி
இன்று
பாளையங்கோட்டையனாய்
தினச் சிறையில்...

அன்பே இறுதியில்
நீ காதலித்தவனுக்குக்
கிடைத்தது கிளி
உன்னைக் காதலித்த
எனக்குக் கிடைத்ததோ களி..

மறு பிறவியிலாவது
அறிய முயற்சி செய்
காதலின் வலி ......

கவிஞர் புதுவைக் குமார்

எழுதியவர் : புதுவைக் குமார் (19-Oct-19, 8:32 am)
சேர்த்தது : புதுவைக் குமார்
பார்வை : 343

மேலே