பாதிராத்திரியில்

பாதிராத்திரியில்
பெய்துதீர்க்கும் மழைக்கு
உன் காமத்தின் குரல்

~

பின்னிச் சுருளும்
சர்ப்பம் கொள்ளும் காமமென
முத்தத்தில் நாக்குகள்.

~

கலவிப்பொழுதின் பெண்கண்கள்!
உள்ளுறங்கும் மிருகத்தைக்
குத்தும் கொடுவாள்

~

உச்சம் எட்டியதை உணர்த்த
பற்களின் தடத்தை
கேட்டுப் பெற்றுக்கொள்கிறது
நாணம் கலைந்த பெண்

Insta Id: @tashantatanisha

எழுதியவர் : தீப்சந்தினி (30-Oct-19, 7:23 am)
சேர்த்தது : நிர்மலன்
பார்வை : 104

மேலே