காதலியின் ஜனன தினம்
ஏனைய கோள்கள்...
பூமிமீது ஏகமாய் பொறாமை கொண்ட தினம்
பிரம்மன் அன்றடைந்த இறுமாப்பை
மிகையாக கருதவில்லை தேவர்கள்.
பனிக்கீற்றுகளில் பரிமளிக்கும் நிலவொளியில் பரிமாணம் காட்டி,
பால்வெளியில் பரிணாமம் அடைந்து
பரந்தகன்று மின்னும் ஒளிப்பேழை சிண்ட்ரெல்லாக்கள்
அவளை ஏந்தி ஆராதித்தனர்..
அன்றைய இரவில் முப்பொழுதுகளும் ஒளிந்திருந்தன.
வெண்ணிலவில் உண்டான இராசயன மாற்றம் கண்டு,
பாதரச குமிழ்களாக பால்வெளியில் பிரவேசித்தன விண்மீன்கள்...
ஒருமித்த சுற்றுவட்டப்பாதையின்…
இடைவேளிகளை இரட்டிப்பாக்கி,
கோள்களுக்கு இடையே கோலங்கள் போடலாயினர்
கிரகத் தேவதைகள்
பிறக்கும் முன் புண்ணியத் தவமாகவும்
பிறந்த பின் தவ வரமாகவும் பாவிக்கப்பட்டவள் என் காதலி.