இயற்கை- காக்கை

தினம் தினம் என் வீட்டு
சமையலறை ஜன்னலோரம்
வரும் காக்கைக்கு
அன்னத்தில் தயிர் கலந்து
தயிர் சாதமாய் வைப்பேன்
காகமும் அதை ஆர்வமாய் சாப்பிடும்
தன் சகாக்களுடன் ......
நான் ஒரு நாள் சற்று மறந்தாலும்
காகம் மறப்பதில்லை
ஜன்னலோரம் அதே நேரம் வந்து
காக்கா காக்கா என்று இரையும்
ஒரு நாள் தயிர் கலக்காது
வெறும் அன்னம் மட்டும் வைத்தேன்
அதைக் கொத்திப் பார்த்த காகம்
தயிர் ஏன் கலக்கவில்லை என்ற தோரணையில்
வேறு விதமாய் கரைய ...... என் தவறை உணர்ந்தேன்
மீண்டும் கொஞ்சம் அன்னத்தில் தயிரிட்டு
வைத்தப் பின்தான் , காக்கை ஹ்ம'நான் அன்றளித்த
அன்னத்தை உண்டு மகிழ்ந்தது .....

காக்கை தன் சகாக்களுடன் வந்து
உணவு பகிர்ந்துகொள்ளல், அதன்
'சூஷ்ம' அறிவு ... சுவை மாற்றம் கிரகிப்பு
அதன் ' நேரம் ' தவறாது உன்ன வருதல்
இந்த குணங்கள் கண்டு நான் அசர்ந்தேன்

புத்தியுள்ள காக்கை .......
இயற்கையின் படைப்பில் விசித்திரம்.

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (12-Nov-19, 10:55 am)
பார்வை : 204

மேலே