பெண் மேகமே
விண்ணில் உலவும் வெண்ணிலா முகத்தவளே
பொன்னில் வார்த்த புத்தம்புதுச் சிலையாய்
கண்ணிலே வந்து கணக்கின்றி வதைப்பவளே
உன்னை நினைத்து உருக்குலைந்து போனேனே
மண்ணை நினைத்து மழைமேகம் பெய்வதுபோல்
என்நெஞ்சம் பெய்வாயா என்சோகம் தீர்ப்பாயா ?
அஷ்றப் அலி
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
