அவள்
செங்கமல முகத்தாள்
பிறை நுதலாள் அழகு
குங்கும பொட்டிட்டாள்
அழகிய சிறு வாயுடையாள்
அதில் மூடிய செவ்விதழ்கள்
கொடியில் காணும் கோவையோ
மூடியே இருந்தாலும் அதில்
நான் காண்பது .....அது பேசாது
பேசும் வார்த்தைகள் .....
அதோ என்னை உற்றுப் பார்க்கும்
அவள் கண்கள் .... பேசிக்கொண்டே இருக்கின்றன
ஒவ்வொரு முறை அவள் மூடித்திருக்கும் போது
ஆனால் அவள் வாய்திறந்து ஒரு வார்த்தைக் கூட
பேசவில்லையே.......
என் கண்ணும், இதழும் பேச
அதில் நான் பேசுவதை நீ அறிந்து வந்து
சொல்வாயா என் மன்னவா..... சொன்னால்
அது சரிதானா என்று நான் நினைத்தால்
நீ போதும் என்று சொல்லும் வரை
பேசுவேன் உன்னுடன் நான்..... என்கின்றாளோ இவள்!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
