எங்கே சென்றாளோ என்னவள்

காற்றினிலே மிதந்து வந்த
கீதம் ஒன்று என் காதில்
வந்து விழுந்தது அது
என் ஆழ்மனத்தை தட்டி
எழுப்புவதுபோல் உணர்ந்தேன் நான்
அது சோக கீதம் ..... பாடியவள்
தன்னை தன் காதலுடன் சேர்த்து வைக்கும்படி
காற்றையே வேண்டுவதாக அமைந்தது'
அந்த குரல்... அந்த குரல் ......அது
என்னவளின் குரல் போல் அல்லவா
என் காதில் ஒலிக்கிறது....
எங்கு தொலைத்துவிட்டேன் என் காதலியை
என்று தேடி அலையும் என் காதுக்கு
அந்த கீதம், இருளில் திசை தெரியாது
கானகத்தில் சிக்கியவனுக்கு வானில்
தோன்றிய ;துருவ நட்சத்திரம் போகும் இடம்
காட்டி செல்வதுபோல் தோன்ற....
நான்.... நானும் காதில் விழுந்த கீதத்தை
அது வந்த திசை நோக்கி செல்கின்றேன்
கீதம் ஏற்றிவந்த காற்றே என்னை என்னவளுடன்
சேர்த்துவைப்பாயோ ......
நம்பிக்கைதான் ..... இதோ இன்னும்
அவளைத் தேடும் நான் !

எழுதியவர் : வாசவன் -தமிழ்பித்தன் -வாசு (15-Nov-19, 8:26 pm)
பார்வை : 292

மேலே