முத்தம்🌹💘 😘முத்தம்🌹💘 😘

முத்தம் ஒன்று தாயேன்
வேண்டாம் என்று உன் உதடு உச்சரித்தாலும்
உண் கண்கள் வேண்டும் என்று சொல்கிறதே
உன்னை அள்ளி அணைக்கையிலே
வெட்கத்தில் விலகி ஓடுகிறாய்
முகம் சிவக்கிறாய்
பின் ஏன் என்னை ஏக்கத்துடன் பார்கிறாய்
உன் பார்வை எனக்கு புரிகிறது
அது என்னை அத்து மீற வைக்கிறது
இதை கண்ட
வான் நிலவு வெட்கத்தால் மேகத்துதினிடையே தன்னை மறைத்துகொள்கிறது.

முத்த மழை எப்படியோ முடிவுக்கு வர
மீண்டும் ஒரு முறை நீ என்னை விட்டு விலகி ஓடி நெற்கதிர் போல் நாணி, கோணி உன் அழகிய பாத விரல்களால் மண்ணில் கோலம் வரைந்து கொண்டே
முகம் நிமிர்ந்தும் நிமிறாமலும்
மழையில் நினைந்த, சிலிர்த்து, காற்றில் மெதுவாக அசையும் பூ போல் உன் உதட்டோர புண்ணகையுடன் என்னை பார்கிறாய் உண்மையில் உரைக்கின்றேன் இந்த ஆண் மகனை உன்னுடைய ஆயுட்கால அடிமையாகவே ஆக்கிவிட்டாயடி.
- பாலு.

எழுதியவர் : பாலு (1-Dec-19, 8:18 pm)
பார்வை : 224

மேலே