அவள் கண்ணின் பார்வை
அவள் என்னைப் பார்த்தாள்
நான் அவளை பார்த்தபோது
அப்பப்பா! எத்தனைக் கூறிய
பார்வை அது, எப்படி சொல்வேன் அதை
ஒரு வில்லிலிருந்து விடுபட்ட அம்பு போல்
அது என் நெஞ்சில் இறங்கியது
நான் கண்மூடிக்கொள்ள, நெஞ்சில்
ஏதோ மலரின் பரிமளம் ......
மலரின் ஸ்பரிசம் கண்டதுபோல்
மூடிய கண்ணைத் திறக்க
அவள் என்னைப் பார்த்து புன்னகைத்தாள்
புரிந்தது அவள் கண்ணின் பார்வை
கூர்மையானதே ..... ஆனால் அது
என்னுள்ளத்தைத் தைக்கையில்
காமனின் அம்பாய் மாறியது
உள்ளத்தை தைத்தாலும் மலராய் தைத்தது
காதலை இதயத்தின் ரத்தத்தில் சேர்த்தது