நீ இலக்கியம்

மலரிதழில் ஊறும் தேனில்
வண்டுகள் மகிழ்ந்து இசைபாடும்
மௌன இதழில் மிதக்கும் தேனில்
என் செந்தமிழ் கவிபாடும்
உன் விழி இமைகள் மூடித் திறக்கும் அழகில்
காதல் புத்தகத்தின் பக்கங்கள் திரும்பும்
இந்த அழகை எல்லாம்
எந்த மொழியில் சொன்னாலும் அது இலக்கியமாகும் !

எழுதியவர் : கவின் சாரலன் (2-Dec-19, 11:09 am)
Tanglish : nee ilakkiyam
பார்வை : 91

மேலே