பழத்தோட்டமடி
என் நெஞ்சில் களிப்பூட்டும் நீ
சிந்தும் சிரிப்பு
மொந்தை கள்ளின் போதையடி
உன் கருவிழி இரண்டும் பார்க்க
தூண்டும்
ஹைதரபாத் பன்னீர்திராட்சையடி
உன் கன்னம் இரண்டும் என்னை
கடிக்கத் தூண்டும்
காஷ்மீரத்து ஆப்பிளடி
இதழ்கள் இரண்டும் சுவைக்க
தேன்சுவை தரும்
பண்ருட்டி பலாச்சுலையடி
உன்னை பார்க்க ஈர்க்கும் முந்திரி
மூக்கடி
மொத்தத்தில் உன் உடல் நான்
ரசித்து
புசிக்க நினைக்கும் பழதோட்டமடி