சன்னல்

சன்னல்
=================================ருத்ரா

காதலர்களின்
"திறந்த வெளிப்பல்கழகங்கள்" தான்.
அவள் கண்களில்
அந்த பாடப்புத்தகங்களின்
பக்கங்களைப்புரட்டுவதற்குள்
எத்தனை சரித்திரங்கள்
எத்தனை யுகங்கள்
தடம் புரண்டு ஓடிவிடுகின்றன.
அன்று
அவளின் ஒரு சிரிப்புப்பிஞ்சு
பட்டதில்
அந்த இரும்புக்கம்பிகள் அத்தனையும்
தங்கம் ஆனது.
இந்த முட்டாள்கள்
உரசிப்பார்ந்து உரசிப்பார்த்து
கிராம் மூவாயிரம் நாலாயிரம்
என்று சொல்லிக்கொள்கிறார்கள்.
அவள் புன்னகைப்பிசிறுகள் போதும்
அந்த "சேதாராம்" மட்டுமே
எங்கள் காதலின் ஆதாரம்!

=============================================================

எழுதியவர் : ருத்ரா இ பரமசிவன். (2-Dec-19, 7:14 am)
Tanglish : sannal
பார்வை : 97

மேலே