சுதந்திரமென்பது
இந்த உடலில் இருக்கும் வரை நானிருக்கேன் என்று எவ்வளவு ஆட்டம்?
உடலுக்கு எரியூட்டு சாம்பலான் பின் எங்கே அந்த ஓட்டம்?
உடலைப் பேணி வளர்ப்பதிலே மனம் கொண்ட நாட்டம்;
கூடுவிட்டு ஆன்மா போன பின் யாரிடம் கூறுவார் என் உடல் ஆகிவிட்டது நட்டம் என்று?
உலகில் மூழ்கி நீந்தும் வரை மொழிக்களுக்குள் போராட்டம்; பொருளாதாரமே வீழ்ந்ததென வேலையில்லா திண்டாட்டம்;
வன்மங்களைக் கட்டவிழ்க்கும் மதம்பிடித்த கொள்கைகளின் ஆர்ப்பாட்டம்,
தானென்ற அகந்தையில் வெந்தும் பட்டறியத் தோன்றாமல் தன்னையே, தன் பொறாமைக் குணங்களால் குற்றங்களால் ஒருவரை ஒருவர் குறை கூறிக்கொண்டு உண்மையின் நிதர்சனம் அறியாமல் கண்ணாபின்னானு வாழ்வதெல்லாம் வாழ்க்கையா?
தீக்குள் கையைவிட்டால் சுடத்தான் செய்யும்.
அதை நான் விட்டுத் தான் தெரிஞ்சுப்பேன் என்போர் விட்டுத் தெரிந்து கொள்ளட்டும்.
சுட்டபின் சுட்டிருச்சே என்று கதறி அழுவதுதான் முட்டாள்த்தனமானது.
தரையில் கவனமாக தன் பாதையில் சுய சிந்தனையோடு பயமின்றி செல்வோர் வழுக்கி விழுவதில்லை.
பயந்தோர் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை.
மனதில் வைராக்கியத்தை வளர்த்துக் கொள்ளுங்கள்.
பிறரைப் பாதிக்கும் செயல்களை தான் செய்யாமலிருப்பது சுதந்திரம்.