குதுகலத்தில் இதயம்

என்னை நீ கடந்து செல்கையில்
உன் கற்றை முடியில் சில பிரிந்தவை
என் கன்னம்பட்டு கனலை மூட்ட
காதலால் கட்டுண்டு கனவில் மிதக்க
கருமேகம் என் மேல் வெண்சாரல் வீசுவதாய்
குதுகலத்தில் இதயம் இமயமளவு பறக்க
இயல்பிலிருந்து நான் இரு மடங்காய் மகிழ்ந்து
இரு முறையாய் என் வேலையை
திரும்ப திரும்ப செய்து என் நிலை மறந்தே
இயங்குகிறேன் அன்பே என்னுள்ளே அழகே.
----- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (12-Dec-19, 10:08 am)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 89

மேலே