நாவினால் சுட்ட வடு

சொல்லைக் காக்க பழகிக் கொள் மனிதா
தொல்லை தரும் சமூகம் வாழும் வரைக்கும்
இல்லாத குறைகளை எடுத்தும் சொல்லும்
நாவு சுட்ட வடு சாவு வரை நிலைக்குமடா
பல்லைக் கழற்றுவதும் வாய் உன்னைப்
பல்லக்கில் ஏற்றுவதும் வாய் புரிந்து கொள்
நல்லதை நினைப்போம் நல்லதைக் கதைப்போம்


அஷ்றப் அலி

எழுதியவர் : ala ali (12-Dec-19, 10:26 am)
சேர்த்தது : அஷ்றப் அலி
பார்வை : 126

மேலே