நீ நடந்து வந்தால்
பாலை மணல் வெளியிலும்
நீரோடை பெருகிவரும்
நீ நடந்து வந்தால்
பூக்காத இலைத்தோட்டத்திலும்
பூக்கள் பூக்கத் தொடங்கிவிடும்
நீ நடந்து வந்தால்
கடலோரத்து அலைகளெல்லாம்
உன் கால்களை முத்தமிட நீந்தி வரும்
நீ நடந்து வந்தால்
நிலவு வராத அமாவாசை இரவிலும்
வான் நிலவு சற்று எட்டிப்பார்க்கும் கீழே யாரென்று
நீ நடந்து வந்தால்
மேற்கு வானம் மெல்லக் கவிந்து ஆரஞ்சு நிற அழகில் நிற்க
நீ நடந்து வந்து என்னைக் கடந்து சென்று சற்று திரும்பிச் சிரிக்க
கவிதைகள் நூறு என்னைத் தேடி வரும் !