என்னை வாழவைக்கும் உன் நினைவுகள்

உன்னோடு கொஞ்சிக் குலாவி வாழ்ந்த
அந்த இனிய நாட்கள் .................
என் மனதில் நான் கண் மூடி தூங்கும்போது
தங்க நிலவாய் உலாவி வருகையில்
நீ இல்லாத இந்த வேளையில்
என்னோடு நீ இருப்பதாய் உணரவைக்குதே
இந்த நினைவோடு காலமெல்லாம்
வாழ்ந்திடுவேனே நான் உன்னோடு
வாழ்ந்ததுபோல்

எழுதியவர் : வாசவன் -தமிழ்பித்தன் -வாசு (17-Dec-19, 3:31 pm)
பார்வை : 212

மேலே