நட்பு

உள்ளொன்று வைத்து
புறமொன்று கூறி
பசுத்தோல் போர்த்திய
புலிபோல் நல்லவர்போல்
அலைபவர் இவ்வுலகில் ஏராளம்
நட்பு தேடி அலைபவர்
இத்தகை கொடிய மனிதரை
தம்மோடு அவர்கள் பழகும்போது
அறிந்து, முளையிலேயே
அவர்கள் நட்பை கிள்ளி
களைதல் வேண்டும்
நல்லோர் நட்பே
நலந்தரும் நட்பு

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (17-Dec-19, 8:54 pm)
Tanglish : natpu
பார்வை : 791

மேலே