பெரிய பொன்னான் சந்தேகம் - ஒரு விவசாயியின் சந்தேகம்
கட்டுரை - உரையாடல்.
பெரிய பொன்னான் - சின்னப் பொன்னான் உரையாடல்.
நெல் விவசாயி ஒருவரின் விவசாயியின் சந்தேகம்
*********************************************************************************************************
கொங்குத் தமிழில் ஒரு சிறிய உரையாடல்.
இது எங்கள் தோட்டத்தில் வேலை செய்யும் இரண்டு ஆட்களுக்கு இடையில் நிகழ்ந்தது. இதுவே பெரும்பாலான விவிசாயிகளின் நீண்ட காலச் சந்தேகமாகவும் இருப்பதால் இங்கு வெளியிடுகிறேன்.
*********************************************************************************************************
பெரிய பொன்னான் ---- "ஏண்டா சின்ப்பொன்னா!"
சின்னப் பொன்னான் ----- "என்னுங்ணா?"
பெரிய பொன்னான் ----- "நம்முகிட்டொ இருந்து இந்தொ நெல்லெ ஒரு குண்டாலு ஆயரத்தி இரநூத்திச் சொச்ச ருவாய் அப்டீணு வாங்கறாங்கல்ரா?"
சின்னப் பொன்னான் ---- "அ ஆமுங்ணா!"
பொ --- "அதுகளெ மில்லுலெ வேவவெச்சு அதெ அரச்சு, அரிசியாக்கராங்கொ!"
சி. பொ --- "அ ஆமுங்ணா!"
பெ.பொ --- "நெல்லுலெ இரக்கர கருக்காயெ அரச்சுக் கருக்காத் தவுடுணு வித்துக்கராங்கொ!"
சி பொ --- "அ ஆமுங்ணா!"
பெ பொ --- "நெல்லரச்சுக் கெடைக்கர உமியெ வித்துக்கராங்கொ!"
சி பொ --- "அ ஆமுங்ணா!"
பெ பொ --- "அடுத்துக் கெடய்கர நொய்த் தவுட்டெ வித்துக்கராங்கொ!"
சி பொ --- "அ ஆமுங்ணா!"
பெ பொ --- "அப்பரொ, நயந் தவுட்டீமு வித்துக்கராங்கொ!"
சி பொ --- "அ ஆமுங்ணா!"
பெ பொ --- "அந்தொ நொய்த் தவுட்லெ கெடைக்கர தவுட்டெண்ணெயெ வித்துக்கராங்கொ!"
சி பொ --- "அ ஆமுங்ணா!"
பெ பொ --- "நெல்லரைக்கீலெ கெடைக்கர குரணெ அரிசியெ வித்துக்கராங்கொ!"
சி பொ --- "அ ஆமுங்ணா!"
பெ பொ --- "குரணயெச் சலிக்கரப்பக் கெடைக்கர கருப்பரிசி, பொடிக்குரணெ இதுகளெ நொய்யரிசீணு கோளித் தீனிக்கி வித்துக்கராங்கொ!"
சி பொ --- "அ ஆமுங்ணா!"
பெ பொ --- "சின்ப் பொன்னா! டேய்! உப்பொ நாஞ்சொல்ரதெக் கெவுனமாக் கேள்ரா!"
சி பொ --- "ஆ..செரீங்ணா!"
பெ பொ --- "இத்தினீமு வித்துகிட்டூ... இதுக்கும் பொரவு,
கெரகம் புடுச்சாப்ப்பிலெ இந்தொ அரிசியெ, ஒரு குண்டாலு ஆராயரொ ஏளாயரொ எட்டாயரொ ருவாயி அப்பிடீணு விக்கராங்கல்ரா?"
சி பொ --- "அடங்கொப்புரானே! ஆமாங்ணா!"
பெ பொ --- "அப்ப்டீணா, நெல்லுக்குமு அரிசிக்குமு நடுவாலெ இரக்கர ஒரு நாலஞ்சாயர்ருவா எங்கீருந்துரா வந்துதூ? அப்பரொ அத்தினீமு எங்கீடா போகுது?"
சி பொ --- "அண்.ண்.ண்ணா! இத்தினி நாளுமு நானு, நெல்லீமு அரிசீமு முட்டும் பாத்துகுட்டு மித்ததெக் கெவுனியாமெ இருந்துரக்கரம் பாருங்ணா!
இதுனாலெதேனுங்ணா,நெல்லு எடுக்கர வெவசாயிக அல்லாருமு க்டனாளியாவே கெடக்கீலெ,
நெல்ல வாங்கி விக்கர ஏவாரீகளுமு அரச்சு அரிசியாக்கர மில்லுக் காரனுகளும் கோடீசுவரனுகளா இரக்கராங்கொ!"
சிறந்த கட்டுரைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
