கோலம் போட்டதுக்கா கைது
கோலம் போட்டதுக்கா கைது?
■■■■■■■■■■■■■■■■
எதுக்கடா அந்த ராசுப்பயலைக் கைது பண்ணீட்டு போறாங்க?
@@####
அவன் பக்கத்து தெருவில வசிக்கிற ஒரு அழகான பொண்ணைக் காதலிச்சான். அந்தப் பொண்ணுக்கு இவனை பிடிக்கல. செருப்பைத் தூக்கிக் காட்டி "போடா பொறுக்கி நாயே"ன்னு அவனைத் திட்டிட்டாளாம்.
@@@@@
அப்பவும் அந்த ராசுப் பையன் திருந்தலயா?
@@@@@@
அவனா? இன்னிக்கு அதிகாலையில அந்தப் பொண்ணு வீட்டு வாசல்ல கோலம் போட்டு '"தாமரை, நீ எங் காதலை ஏத்துக்கணும். இல்லன்னா நான் தற்கொலை பண்ணிக்குவேன். இப்படிக்கு உன்னுயிர் காதலன் ராசு"ன்னு கோலமாவிலேயே எழுதி வச்சனாம். விடிஞ்சதும் அக்கம்பக்கத்தினர் எல்லாம் அதைப் பாத்துட்டு விசாரிச்சிருக்காங்க.
அந்தப் பொண்ணோட அண்ணன் காவல் அலுவலகத்தில புகார் கொடுத்தானாம். அந்த ராசுப் பயலை முட்டிக்கு முட்டி தட்டி கைது பண்ணீட்டு போயிட்டாங்கடா.
@@@###
அட நாயே! வேலை வெட்டி இல்லாம தெண்டச்சோறு தின்னுட்டு இருக்கிறவனுக்கு காதல் கேக்குதா?
@@@@@
இதுதான்டா கோலம் போட்டு கைதானவன் கதை.