பூமியம்மாள இரங்கல் தொடர்ச்சி
பூமியம்மாள இரங்கல் தொடர்ச்சி
அப்பா துரைக்கமலாட் சித்தாய்க்கு தப்பாது
ஒப்பிலா மாணிக்கப் பூனெனக் - - கொப்புழ்
கொடிமகள் தீனரஞ்ச னிக்கைப் பிடித்தக்
கடிமணாளன் ராம்மூர்த்தி பார்
கோட்டைவேலூர் பிறந்தபூமி கோட்டக்காஞ் சிக்குடியாம்
பீடுவசந் தாகொட்டைக் காபிகடை - - தேட்டமுடன்
வாழ்ந்த இணைபூமி ராம்மூர்த்தி தாழ்தலின்றி
கூழீந்தார் கேளிர் பசிக்கு
கோட்டக்காஞ்சி.= கோயில் நிறைந்தக் காஞ்சி
தினமும் விருந்தொக்கல் வந்தார் அனிச்சம்
பிணங்கா விருந்து படைத்தார் - - உண்மையிது
காஞ்சிப் புடவைவாங்கி அஞ்சாப் பசிபோக்க
தஞ்சமிவர் இல்புகுந்தார் சொல்
நரசிம்மன் நானிருநாள் மாதந் தவறா
கற்பதரு தீனரஞ்ச னித்தாய்- - அருள
விருந்தமுது உண்டு பருகியது நீங்காது
நிற்கிற தென்நினை வில்
பூமியறுபத் தொன்பதில் காமக் கடிமணத்தால்
ஏமுற்று மூன்றாண் மகவீன்றார் - - பூமியும்
செந்தில் அரிகோபி நற்பதவி சேர்ந்தார்
அந்த சுமங்கலி பூமி
காமம் =விரும்பி. ஏமுற்று= இன்புற்று
தானும் புகுந்தவீட்டில் காண்டாரே மூத்தாளாய்
ஏன்றலின்பின் ஒன்றி நடத்தினார்- - சான்றகம்
என்னே யவரின்சொல் இன்முகமும் என்னேநான்
எண்ண இறைஞ்சும் மனம்
ஏன்றலின்பின் = ஏற்றுக்கொண்ட பின் சான்றகம் = (மூத்தாளாய்)அமைந்தவீடு