காதலின் சின்னமாய்

கலந்து வந்தது காற்றில்
கானம் அதுவும்
ஒரு காரிகையின் குரலில்,
காது கொடுத்தேன் புரிந்தது
அவளா இவள்/ தேன் போல்
இனிக்கிறது உள்ளமதில்,
நேரில் பார்த்த அவளை
நிலையாய் நிறுத்தினேன்
இதாயத்தில் இன்று.
மட்டமாக நினைத்தேன் அன்று அவளை
வாட்ட சாட்டமாய் என் இதயத்தில்
குடியமர்த்தி விட்டேன் இன்று,
இரும்பும் காந்தமும் போல்
என் இதயத்தில் ஒட்டிக் கொண்டாள்
பார்த்தோம் சிரித்தோம்
பழக பழக இனிமையின்
ராகம் அவள் குரலில், என் மனதில் ,
மேலும் மேலும் மெருகூட்டியது
கானம் காதலின் சின்னமாய்
கானமும் காதலுக்கோர் சின்னம்...

எழுதியவர் : பாத்திமாமலர் (13-Jan-20, 11:16 am)
Tanglish : kathalin sinnamaay
பார்வை : 127

மேலே