பொங்கலாய் மகிழ்வு பொங்கட்டும்
மங்களம் பொங்கட்டும் மனக்கவலை தீரட்டும்
தங்கிநின்ற துன்பங்கள் பழமையாய் எரியட்டும்
பொங்கும் அரிசிபோல புதுவாழ்வு மலரட்டும்
செங்கரும்புச் சுவைபோல உழவர்மனம் மகிழட்டும்
மங்காத நல்வாழ்வு யாவருக்கும் கிடைக்கட்டும்
என் இதயம் கனிந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள்
அஷ்றப் அலி