சாமுத்திரிகா லட்சணமே வேட்டி சட்டை பேண்ட் ஜீன்ஸிலும் நீ வரவேண்டும்

-----------------------------------சாமுத்திரிகா வேட்டி------------------------------------------------------

தாலி கட்டற நேரத்தில் மாப்பிள்ளை எதுக்கடா தகராறு பண்ணறாரு?
@@@@@@
பொண்ணுக்கு சாமுத்திரிகா பட்டு எடுத்த மாதிரி தனக்கு சாமுத்திரிகா வேட்டி எடுக்கலையாம்.
===========================================================================
டாக்டர் மலருக்கு சொன்ன கருத்து :
=================================

சாமுத்ரிகா லட்சணம் என்பது ஆண் பெண் இருவருக்கும் உள்ள முழுமையான அழகுகள் . இந்த பூரணமான
லட்சணங்கள் அல்லது முழுமையான மேனி அழகு உள்ளவர்களை தற்காலத்தில் காண்பது அரிது.
ஆதலினால் சாமுத்திரிகா பட்டுச் சேலை போல் சாமுத்திரிகா பட்டு வேட்டியும் ஆடைச் சந்தையில் விரைவில்
வந்துவிடும் . முட்டு வரை நீண்ட கரம் சாமுத்திரிகா லட்சணங்களில் ஒன்று.
invisible சாமுத்திரிகா long handers அரசியலில் அதிகம் .

கவிச் சகோதரி சுரிலீஸ்வரியின் கருத்தில் சொன்ன கருத்து :
=============================================================


invisible சாமுத்திரிகா long handers அரசியலில் அதிகம்." நான் இங்கே சொன்னது satirical ,
கைநீளம் அவனுக்கு என்ற பொருளில் நகைச் சுவையாகச் சொன்னேன் .
காந்திஜி காமராசர் இருவரும் சாமுத்திரிகா லட்சண நெடுங் கரம் உடையவர்கள் என்று படித்ததாக நினைவு.
இத்தகையோர் தெய்வீகத் தன்மை உடையோர் மற்றவர்களிலிருந்து வேறுபட்ட உயர்ந்த மனிதர்களாக
இருப்பர். புராணம் கண்ணனுக்கு முட்டு வரை கரம் இருக்கும் என்று சொல்லும் .

இலக்கிய ரசிகமணி வே ஆ வின் இனிமையான சாமுத்திரிகா கருத்து
=================================================================

சாமுத்திரிகா பட்டு வேட்டி சட்டை விரைவில் சந்தைக்கு வரும் .முதலில் மாப்பிள்ளை மணமகள் கழுத்தில் திருநாண் கட்டட்டும் !
மணமக்கள் கனவுகள் நிறைவேற ஆவல் !


கவிச் சகோ டாக்டர் மலரின் நகைச் சுவை பதிவில் நான் அளித்த பதிலும் அதை சுட்டிக்காட்டி கவிச் சகோதரி
சுருளீஸ்வரியின் கருத்திற்கு நான் சொன்ன விளக்கக் கருத்தினையும் இன்டெரெஸ்டிங்காக இருந்ததால் இங்கே உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் , அதோடு இலக்கிய ரசிகமணி வே ஆ சொன்ன இனிமையான கருத்தையும் பகிர்கிறேன்

எனது விருப்பம் :
சாமுத்திரிகா லட்சணமே வேட்டி சட்டை பேண்ட் ஜீன்ஸிலும் நீ வரவேண்டும் !

எழுதியவர் : கவின் சாரலன் (24-Jan-20, 9:47 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 224

மேலே