நட்பே

கடலும் ஆழமில்லை உன் நட்பின் ஆழத்தால்...
வானமும் நீளமில்லை உன் நட்பின் நீளத்தால் ...

உனது நட்பை பெற எனது தவம் தான் என்னவோ...
உன் அன்பை பெற நான் பெற்ற வரம் எதுவோ..

உன் நட்பின் வரிகளில் என் கவிதைகள் ஏழையாகும்..
உன் அன்பின் அரவணைப்பில் என் திமிரும் அடங்கிவிடும்...

சிறு சண்டைகளும் மாணிக்கங்களாய்
தோழமை கிரீடத்தில் அலங்காரம் செய்யும்
பிரிவு என்றும் நம் இடத்தில் தான்..
மனதில் அல்ல...

எழுதியவர் : (25-Jan-20, 4:42 pm)
சேர்த்தது : rathika
Tanglish : natpe
பார்வை : 889

மேலே