பல நேரம்
பல நேரம் நினைத்திருப்பேன்
நீ என்னை நினைப்பாய் என்று...
பல நேரம் பார்த்து இருப்பேன்
நீ என்னை பார்ப்பாய் என்று..
பல நேரம் நேசித்து இருப்பேன்
நீ என்னை நேசிப்பாய் என்று...
பல நேரம் அழுது இருப்பேன்
நீ என்னை கண்ணீர் துடைப்பாய் என்று
பல நேரம் பேசுகிறேன்
நீ எனக்கு சொல்லாய் இருப்பாய் என்று
பல நேரம் எழுதுகின்றேன்
நீ எனது கவிதையாய் இருப்பாய் என்று
பல நேரம் பாடுகிறேன்
நீ எனது பல்லவியா இருப்பாய் என்று
இத்தனை பலவும் செய்தேன் நீ எனக்காக வேண்டும் என்று...