காதல் கனவே

இமைக்க மறந்து
இளமை குலுங்க குலுங்க
முதல் அறிமுகம் தந்தேன்

சிலை எடுப்பதில் சிற்பியென
அவனை நினைத்து கொண்டேன்
மழை பொழுதினில் மையல்
கூடிட மயங்கி நின்றேன்

திறந்த மனதில்
சிவந்த முத்தங்கள்
மேலும் சிவக்க கண்டேன்

பருவ மழையில்
நனைந்த கன்னங்கள்
சிலிர்க்க சிலிர்க்க
மேலும் அழகை தந்தேன்

தயக்கமின்றி தழுவிய
விரல்களின் வீணையானேன்
விலைகொடுத்தலும் கிடைக்காத
விடியலில் வீழ்ந்து கிடந்தேன்

நீல நதியினிலே நாளும்
நீந்தி களித்ததிலே கடலாய்
அவன் அணைப்பை
எதிர் கொண்டேன் ரேவதீ நான்

ரேவதீயில் தீயை அணைத்து விட்டு
ரேவதியாய் பருவம் மினுங்க நின்றேன்
நாளும் பருவ சிலையாய் வென்றேன்
நிறைவான வாழ்க்கையிலே
நிறைமாதம் கொண்டேன்.....
நிறைமாதம் கொண்டேன்.....

எழுதியவர் : மேகலை (25-Jan-20, 4:51 pm)
சேர்த்தது : மேகலை
பார்வை : 137

மேலே