49 அடங்காக் குடிகள் வளங்குன்றி அழியும் – குடிகளியல்பு 3

கலி விருத்தம்
(விளம் விளம் மா கூவிளம்)
(மாச் சீரின் இறுதியில் குறிலோ, குறில்+ஒற்றோ தான் வரும். நெடில், நெடில்+ஒற்று வராது)

நதியினு முயர்பணை நந்துங் காருலாங்
கதியினு முயர்வரைத் தருக்கள் காயுமால்
பதியினு முயர்தடம் காப்பைஞ் ஞீலங்கள்
விதிசெயல் சிதைந்தக மெலிந்து நையுமே. 3

- குடிகளியல்பு
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

பொருளுரை:

”செங்கோல் மன்னன் இல்லாவிட்டால், ஆற்றினால் மிக்க நீர்வளமுள்ள வயல்கள் விளைச்சல் இன்றி கெடும். மேகத்தை ஊடுருவிச் செல்லும் உயர்ந்த மலையிலுள்ள மரங்களும் காய்ந்து வாடும். ஊரில் உள்ள சிறந்த குளம், சோலை, பசுமையான நீலமலர்கள் வாழ்க்கை ஆகியன முறைகள் எல்லாம் கெட்டு வளங்குன்றி அழிந்துவிடும்” என்றும்,

மன்னன் இல்லா நாட்டில் மக்கள் எந்த விதிமுறைகளுக்கும் கட்டுப்படாமல் நாட்டின் வளங்குன்றி அழிந்து விடுவார்கள் என்றும் கூறுகிறார் இப்பாடலாசிரியர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (27-Jan-20, 6:25 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 55

சிறந்த கட்டுரைகள்

மேலே