ஓட்டுரிமை

மக்களின் ஓட்டுரிமை

அன்று மன்னர் ஆட்சி. மன்னருக்கு உதவி அமைச்சர்குழுக்கள் சான்றோர்களின் சபை
பிரபுக்கள் மக்கள் பிரதிநிதிகள் கிராமந்தோரும் பஞ்சாயத்துக் குழுக்கள் நியாயம்வழங்க
நாட்டான்மைகள்
இத்யாதி இத்தியாதி என்ற பல குழுக்கள் நியாயதை கங்கானிக்க
ஒற்றர்கள் என இவர்களின் உண்மையான
உதவி யால் நாட்டைக் கண்காணித்து
ஆய்ச்செய்தான் மன்னன். இவற்றைத் தவிர பரிபாலனக குழுக்கள்
படை ஒழுக்கக்
குழுக்கள் பலபலவாம். நியாய மன்றங்களும் உண்டு. இப்படி எல்லாவற்றையும் ஒருசேரைக்

கட்டுக்கோப்புடன் நடத்தியவன் மன்னன். அவனுக்கு மக்கள் நலம் முக்கியம்.

இன்று என்ன நடக்கிறது பாரதம்
ஏன் அல்லோகலப் படுகிறது. சுதந்திரம் என்ற பெயரில் பலப்பல
அநியாயங்கள் நிறைவேறி வருகிறது. காரணம்
இங்கிலாந்தின் ஆட்சி முறை இங்கும் நடக்கிறது.
மன்னன் ஒருவன் செய்த பணியை பலரும் பங்கு போட்டுக்
கொண்டார்கள். ஒற்றைத் திறனை
பன்மு:கத் திறனாக்கி செயல்பட நாட்டுப் பற்று அழிந்து போனது. மந்திரிகள்
பாராளுமன்றம்
பெரிதென்கிறான். நீதித்துறை
யோதான்தான் பெரியது என்கிறது.
பார்லிமென்டின் சம்பந்தப்
பட்ட வழக்கையும்விசாரிக்கிறது. செயல்படுத்து வோனோ தான்
ஆரம்பித்தால்தானே எல்லாப்
பிரச்சனையும் ஏற்படுகிறது என்று முழங்குகிறது. இங்கு ஒரேசக்தி
மூன்றாகப் பிரித்து
ஆட்சியை நடத்துகிறது. ஆனால் மந்திரிகள் கையில் பதவிக்கு ஆட்களைத் தேர்வு
செய்வதும்
மாறுதல் உத்திரவு போடுவதும் சஸ்பென்ட் செய்வதும் என்ற அதிகாரங்க ளை த் தற்காலிகமாக
வைத்துள்ளார்கள். ஆனால் பதவியில் உள்ளவனுக்கு மந்திரி களால் துன்பம் ஏற்படும்போது
அவன் நீதிதுறையை
அணுகி தற்காலிகமாக துயர் துடைக்க வழி உண்டாக்கி கொள்கிறான்.
மந்திரிகள் தவறு செய்தால் காவல்துறையும்
. செயல் துறையும் நீதித்துறையும் விசாரித்து
தீர்ப்பு வழங்குகிறது.

ஆனால் இந்த மூவரின் இடமாற்றம் பதவிஉயர்வு
சலுகைகள் எல்லாம் மந்திரிகள் கையில்
இருக்கிறது. ஆகையால் மந்திகள் செய்யும் தவறுகள் மேலே சொன்ன
மூவரும் தானாகவே
நாட்டின் முன்னேற்றம் கருதி முன்வந்து எதையும் செய்வதில்லை,, சுயநலம் தான் காரணம்.
இப்படித்தான் நாடு நல்லவற்றை செய்ய மறந்து தடுமாரிக் கொண்டிரு க்கிறது

மந்திரி மார்களில் பலரும் சுய
நலவாதிகள். அவர்களுக்கு நாட்டு ப்பற்றோ நாட்டு சேவையோ
அரவேக்கிடயாது . அவர்களின் முதன் மந்திரிகள் என்ன சொல்கிறார்களோ அதைத்தான்
செய்வார்கள். முதன் மந்திரியோ அனைத்து மந்திரிகளின் துறையிலும் மூக்கை நுழைத்து
வாசனைப் பிடிப்பார்.அவருக்குப் பிடித்தவைகள்தான் உத்திரவாகும்.

ஐம்பது வருடமாக நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு மக்களிடையே பயத்தையும் பாதுகாப்
பின்மையும் வளர்த்து விட்டார்கள்... ஒரு அல்பன் அவன் கட்சிக்காரன் கூட இல்லை
சாதாரணக் கைக்கூலி பேச்சாளராம் அவன் ஜனாதிபதியையும் ஏன் பாரதப் பிரதமரையும்
அவன் இவன் என்றும் முட் டாள் என்றும் காணொளியில் போட்டுத் தரக்குறைவாக ஒளி
பரப்புகிரான்.ஒரு பாரதப் பிரமரை கைக்கூலி பெற்று மேடையில் தாக்கிப் பேசுபவனுக்கும்
என்ன நேரடிததொடர்பு இருக்கமுடியும். பிரதமர் என்ன கொடுமை செய்தார் இவனுக்கு ,
ஒன்றுமில்லை .. இவனுடைய குரங்கு முகத்தை அஷ்டகோணலாக்கி பாரதப் பிரதமர்
இப்படி இருக்கிறார் என்று கேவலமாக நடித்துக் காட்டி அதை லட்சக்கணக்கானவர்கள்
பார்க்கும்படி காணொளியில் போட்டு அசிங்கப் படுத்துகிறான்.
காணொளி எடுத்தவன் முதல் நடித்தவன் ஒளிபரப்பியவன். இன்டர்நெட் காரன் வரை
ஒருவர்பேரிலும் வழக்குகள் தொடராதது ஏன். காவல்துறை மாநில ஆட்சிக்காரன்
கையில் இருக்கிறதாம்.பிரதம்ரைத் திட்டினால் பரவாயில்லையாம். வீதிகளில் வயதான
வர்களை பார்த்தால் கிண்டல்செய்வது அவர்களை மரியாதை யில்லாமல் பேசுவதெல்லாம்
இதனுடைய தாக்கத்தினால் எழுந்ததே. இவர்களையெல்லாம் யார் கண்டிப்பது.
இவர்களை யாரும் கண்டிக்கப்போவதில்லை. பல பிரிவுகளில் சட்டத்திலிரு்ந்தும்
ஊகத்தின் பேரில் கூட வழக்கைத் தொட ரமாட்டென் என்கிறார்கள். அதனால் சாதாரண
மக்கள் வீதியிலும் பயந்தே செல் கிறார்கள்.z பெண்களை கிண்டல் செய்வது கூப்பிடுவது எல்லாம்
அதிகமாகிப் போயுள்ளது.

மாதா பிதா குரு தெய்வம் என்றார்கள். அது இப்பொழுது நடைமுறையில் உள்ள தா ? ஏன்
மாதா என்பவள் அன்னையாக நடந்துகொள்வது இல்லை. தகப்பன் தகப்பன் ஸ்தானத்தில்
இருந்து கொள்ளாமல் தறுதலை களாகிப் போனார்கள். குரு வைபற்றிக்கெட்கவே வேண்டாம்.
இப்போது குருவைத் தேர்ந்தெடுக்கும் முறை லஞ்சவழித் தவிர நேர்மைக்கு வழியில்லை.
குருவைத்தேர்ந் தேடுபவன் அவன் யாராயிருந்தாலும் அவன் பணக்காரனாக போனான்.
பணம் எப்படி பாடம் சொல்லிக் கொடுக்க முடியும். அப்பப்பா எத்தனை தில்லுமுல்லுகள்.
லஞ்சத்தை மறைக்க தேர்வு முறைகள் வெளிப்படை என்று திரைமறைவு நாடகக் பணம்
பரிமாற்றங்கள்.


மாநிலத்தை ஆட்டிவைக்கும் முதன் மந்திரியாகி மாபெரும் ஆளாகும் நினைப்பில்தான்
அவனவன் தனிக்கட்சி ஆரம்பிக்கக்காரணம். சிலர் முதல் மந்திரியாக ஆகாவிட்டாலும்
மாபெரும் செல்வந்தர் களாகியது கண்கூடாகக் கண்டோம். ப ட்டி தொட்டி ஏழை
பணக்காரன் அரசு அதிகாரிகள் கூலித்தொழிலாளி, ஆண், பெண் என்று பலரும் ஆரம்பத்தில்
அனுப்பிய பணங்களை தன் பேரில் டெபாசிட் செய்துகொண்ட ஜாதிக் கட்சிதலைகள்
இன்று மாபெருங் கோடீஸ்வர ராகி வாழ்கிறார்கள். இவர்கள் ஒருவேலையும்செய்யாதத்
தலைவர்களுக்கு கோடிகளில் எப்படி பணம் சேர்ந்தது என்று இதுவரை கேட்டதில்லை.
எப்படி இப்படி நிலங்கள் பங்களாக்கள், பேக்டரிகள், ஊட்டி,சென்னை,தில்லி பெங்களூர்
மற்றும் சொந்த ஊரில் உள்ளதையும் வெளிநாட்டில் உள்ளதையும் எந்த வருமான
வரிக்காரணும் ஒரு சோதனையும் செய்தலில்லை. வருமானவரி்யை சரியாக கணக்கிட்டு
வாங்கும் அரசாங்க அதிகாரிகள் ,1970 க்குப் பிறகு யாரும் தேர்வாகவில்லை என்பதே உண்மை.
உத்தியோகம் செய்பனை மட்டும் கழுத்தை பிடித்து வரியை வாங்கி வசூல் செயது விடுவார்கள்.
அரசியல் தலைவர்களில் ஏமார்ந்த MGR , மட்டுமே பாகெட்டில் இருக்கும் பணத்தை எடுத்து
உடனுக்குடன் கொடுத்துள்ளார்.மற்ற தலைவர்கள் பணத்தைக் கையா லும் தொட மாட்டார்கள்.
பணத்தைத் பாகெட்டிலும் வைக்கமாட்டர்கள். எல்லாம் பெட்டிகள் என்று கேள்வி. பாரத
நாட்டில் ஒழுங்காக வருமான வரி கட்டுபவர்கள் அரசாங்க மற்றும் ஆபிஸ் உத்தி
யோகஸ்தர் களும்தான்

40 வருடமாக அரசியல் தலைவராக இருப்பான். பார்லிமெண் டினுள் நுழைந்திருக்கவே மாட்டான்.
ஆனால் நாட்டிலிருந்து டில்லி பார்லிமெண்ட் செய்வது அநியாயம் மோடி கேடி என்று மட்டமாக
பேசுவான். அவனை யாரும் கைது செய்ய மாட்டார்கள் என்ற தைரியத்தில் பேசுகிறான். கட்சி
தலைவனைத்தான் கைது செய்ய முடியவில்லை பேட்டா வாங்கிப் பாட்டுக் கச்சேரி செய்தவன்
புரோமோஷனாகி மேடையில் பேசும் கைக்கூலிக ளையும் கைது செய்ய போலிஸார்
தயங்குவதேன்.கைக்கூலி சொல்கிறது மோடி கேடி என்றும். கூலிக்கு !மாரடிக்கும் கைக்கூலி
நாட்டின் நலனை மேடையில் பிரதமருக்கு எதிராக எதையும் பேசுகிறது. இவன்மீது தேச துரோக வா,ஹக்குப்
போட்டு ஜாமீனில் விட மறுத்து கொண்டே இருந்தாள் மூச்சு விடுவானா. இவனுக்கு என்ன தெரியும்
ஸ்டெரலைட் என்கிறான் கூடாதென் கிறான் கூடங்குளம் கூடாதாம் பெட்ரோல் கிணறு கூடாது
என்கிறான்.. இப்படித்தான் வீட்டுவிழாவில் பேச ஆரம்பித்து மேடையில் பேச ஆரம்பித்து
சொத்து சேர்க்க ஆரம்பித்தவன். எங்குசென்று எப்படிப் பேசி மாட்டிக் கொண்டான் பாருங்கள்.
பணம் கொடுத்தால் தமிழன் எதையும் பேசுவான் என்ற நிலைக்கு நம்மைத் தரம் தாழ்தி நாட்டு
மக்கள் குழம்பிப் கெட்டுப் போகும் நிலைக்கு கொண்டுவந்துவிட்டான். இவனெல்லாம்.
சரித்திரம் படிக்காதவன் நாட்டுப்பற்றில்லா அண்டா சுரண்டிகள், அடுப்பு ஊதிகள்,
நாதாரிகள்.இவர்கள் நாட்டுக்குத் தேவையில்லா ஜென்மங்கள்.

பொதுவில் .சட்ட சபையில் இருப்பவன் தன்கருத்தை சட்ட சபையில் பேசட்டும் ஜெயிக்கட்டும்.
அங்கு செல்லாத பேச்சை மக்கள் மத்தியில் பேசி எதைச் சாதிக்கப் போகிறாய். அப்படிப்
பேசுவதே தேச துரோகம் தான். பார்லிமென்ட்டில் இருப்பவன் பார்லிமென்ட்டில் பேசட்டும்.
ஜெயிக்கட்டும். உள்ளூரில் பேசி எதற்கு குழப்பம் விளைவிக்கின்றாய். பார்லிமென்ட்டில்
மெம்பராய் இல்லாத வெத்து வேட்டை இங்கு ஏன் போடவேண்டும்.. இதை பொதுக்கூட்டங்களில்
விவாதிப்பது பாமரர்களை தூண்டி விடுவதற்குச் சமமானதாகும்.. தமிழ் நாட்டில் இதுவரை
மொத்தக்காவர்களில் முக்காவாசிப்பேர் களின் ஒரே வேலை மந்திரிகளின் பாதுகாப்புதான்.
துப்பாக்கிச் சூடு நடந்தால் ஆட்சிக் கவிழுமாம். 1965 க்குப் பிறகு உண்மையான துப்பாக்கிச்
சூடு இந்திரா காந்தி சென்னை வந்தபோதுதான் நடந்தது.ராஜிவ் காந்தியின் கொலைக்குப்
பிறகுதான் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பற்றி கவனிப்பு செலுத்தப் பட்டது. போலீசாருக்கு
வெள்ளையன் விட்டுவிட்டுப் போனானே ஒரு காவல் நிலையத்துக்கு 13 துப்பாக்கி அது
இன்னும் பெயரளவிற்கு இருந்துகொண்டுதான் இருக்கிறது.. ஆனால் அது சுடுமா என்பது
ஆண்டவனுக்கே வெளிச்சம். இவ்வளவு எதற்கு ,ஓவ்வொரு மாவட்டத்திலும் நன்றாக
குறிபார்த்து சுடக்கூடிய காவர்கள் 1000 பேருக்கு 10 பேர்கள் தேற மாட்டார்கள். IPS
ஆபிசர்களில் தேவாரம் விஜயகுமார் போன்ற சிலரே துப்பாக்கிப் பிடிக்க சுடத்தெரிந்தவர்கள்.

போதாக்குறைக்கு ஊடகங்கள் தாங்களாகவே நீதிபதிகளாக நியமிக்கப் பட்டுள்ளது போன்று
செயல்பட்டு வந்து ஒன்றுமே அறியாது அறிவாளிகளைத் தாக்கிப் பேசி அவர்களின்
மதிப்பைக் குறைப்பது மிகுந்த வேதனை யளிக்கிறத.. சட்டசபைக்கு போகாதவனும் பார்லிமெண்ட்
டிக்குப் போகதவன் எதற்கு ஊரில் மக்களை கண்டபடி பீதியுரச் செய்ய வேண்டும். வெத்து
வேட்டு த் துப்பாக்கிகள் ஏன் முழங்க வேண்டும்.

எழுதியவர் : பழனிராஜன் (28-Jan-20, 8:53 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 425

சிறந்த கட்டுரைகள்

மேலே