இரசிக்கிறேன் இந்தத் தனிமையை

இரகசியமாய் சிந்தையில்
நீ ஊடுருவ...
இதயத்தில் இசைத்தட்டு சுழலுகிறது..!
காரணம் கேட்டால்..
இதயச்சுவற்றில் உன் உருவம்தனை
செதுக்குகிறாய்..!
சிற்பமாய் நீ வீற்றிருக்க
சிதைந்த உளியாய் என் நெஞ்சம்..!

ஜீவனில் உன் வாசனை
சுவாசமாகிறாய்...
காதல் திருகாணி கொண்டு
உயிரை திருகிச்செல்கிறாய்...
விடுவிக்க முயன்றும்
தோற்றேப் போகிறது
என் இதயம்...
காதலின் கோரப்பிடியில்..!

கண்மூடி தூங்கத்தான்
தாலாட்டுகிறாய்...
கண்விழித்து நான்தேட
கனவாகி
கலைகிறாய்...
கண்ணாமூச்சி நீயாடி
கண்களை
துயராக்குகிறாய்..!

சில நொடிகளே
நினைவலையில் நீ நின்றாலும்...
கண்களை குளமாக்கியே
செல்கிறாய்...
அறிந்தும் ஆனந்த யாழினை
மீட்டுது இதயம்..!
என் இரவைக் களவாடி சோகத்தீயில்
எரிக்கிறாய் உன் பிரிவால்...
இருந்தும் இரசிக்கிறேன்
இந்தத் தனிமையை...
உன் நினைவின் துணையோடு..!

எழுதியவர் : சகாய டர்சியூஸ் பீ (28-Jan-20, 12:34 pm)
பார்வை : 2892

மேலே