அவள்

அவளின் நீண்டு விரிந்த பெரிய
கண்கள் தாமரைப் பூப்பூவென்றால்
கன்னங்களோ மாம்பழக் கிண்ணங்கள்
விரிந்தும் மூடும் அவள் அதரங்கள்
சிவப்பு ரோசா பூ
அவள் சிற்றிடை வெற்றிலைக்கொடி
அவள் வாய்திறந்து பேச
யாழின் இசையாய் மொழி இசைக்க
அது தமிழ் என்று தெளிந்தேன் நான்
தெளிந்தேன் அழகு தமிழ்ப்பெண்ணே இவளென்று

எழுதியவர் : வாசவன் -தமிழ்பித்தன் -வாசு (28-Jan-20, 2:50 pm)
Tanglish : aval
பார்வை : 115

மேலே