நிலவின் நிழலில் வானம்

நீல வானில் நீந்தும் நிலவே நீ யாரோ..
நீளப் பார்வையில் சிந்தும் ஒளியா நீ..
நீதி தேவனின் ஆதிப் படைப்பா நீ…
நீரில் தூங்கும் இரவின் விளக்கா நீ..

நீங்கிச் செல்லும் காலக் காதலியா நீ…
நீந்திச் செல்லும் வான தேவதையா நீ..
நீங்கா நினைவுகளின் வெண்பனியா நீ.
நீளா இரவுகளின் இளங் கன்னியா நீ…

இப்படிக்கு
பூமி

எழுதியவர் : ஜப்பார் தாஸீம் (2-Feb-20, 4:09 pm)
சேர்த்தது : ஜப்பார் தாஸீம்
பார்வை : 320

மேலே