ஒரு கவிதை
ஒரு கவிதை எழுத முயற்சிக்கிறேன்
முதல் வரியோ
கடைசி வரியோ என தெரியாமல்
ஒரு வரியினை யோசிக்கிறேன்
எப்பொருளில் எழுதுவது?
காதலா
காமமா
வாழ்க்கையா
சோகமா
இயற்கையா அல்லது
இறப்பையா..
எதனை எழுதத்துவங்குவது??
ஒரு கவிதை எழுத முயற்சிப்பவனுக்கு
பெரும் சோதனையே
முதல்வரி தான்..
கண்டபடி சிந்தித்து வரியினை கண்டுபிடித்தால்
துள்ளிக்குதித்து வரும் அடுத்தவரிகளை மேல்கீழாய் அடுக்கி
கவிதை என நினைத்துக்கொண்டு
படித்துப்பார்க்கிறேன்..
கவிதை வடிவில்
ஏதோ கிடைத்திருந்தது.
கவிஞனாகிவிட்ட கர்வத்தில் இனி
காதலிக்கத்துவங்குகிறேன்.
Rafiq