பெண்ணே
ஆழியின் நடுவில்
பொங்கும் அலைகளுடன் ரகசியம்பேசி
ஆழத்தின் இருளில் புதையல்தேடிடும் பெருங்கள்வன் நான்
ஆழியின் ஆழத்தில் புரளும்
அலைகள்
ஒருபோதும் சுவாசிக்கவிடாது
ஆகவே
சுவாசத்தினை மறந்திடப்பழகுகிறேன் இப்போது
இருளின் ஏகாந்தத்தில் நிலவும் தனிமை
கொடூர பயமானது என்பதனை உணர்வீரோ...
எங்கிருந்தோ நீளும் ஒரு
ஆக்டோபஸ் கரம் சுற்றிப்படர்கிறது
உன் நினைவுகளைப்போல்..

