காதல்

காதலன் அவன்
காதலி அவள்....
அவள் ......
உடலிடையே அணிந்த
சேலைக்குப் பின்னே
கலசங்களென்ன விம்மிய
மென்முலைகள் இடையே
இவன் முகம் புதைத்து
தன்னையே மறந்து
பூவின் மகரந்தத்தில்
புதைந்து கிடைக்கும்
கரு வண்டு ஒக்க
மயங்கி கிடக்க
காதலி அவள்
மலராய் ஏதோ நுகர்ந்தாள்
காமம் காதலாய் மலர்ந்ததா
காதல் காமம் தந்ததா
யாசித்தான் ஒருவன்
கொடை தந்தாள் அவள்
இருவரும் இன்பத்தின் எல்லையில்
ஒன்றிருக்க ஒன்று வந்ததோ...

எழுதியவர் : வாசவன் -தமிழ்பித்தன் -வாசு (6-Feb-20, 4:42 pm)
Tanglish : kaadhal
பார்வை : 234

மேலே