அவள்

அழகான மலர் மொட்டு
எனோ இதழ்கள் அலராது
வாடி மண்ணில் விழுந்தது
பாவம் அந்த கன்னியவள்
மனதில் பூட்டிவைத்த ஆசைகள்
அத்தனையும் தீயில் கருகியதுபோல்
சலனமற்று கிடக்கிறாள் கேட்பார் இன்றி
கற்பழிக்கப்பட்டு ..... பருந்தோ எங்கோ
பறந்துபோனது ........
பெருகிவரும் பாலியல் வன்மை
பெண்ணை தெய்வமாய்ப் போற்றும்
நாட்டின் நிலை இது .....
இனி மாறுமோ இந்நிலை

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (6-Feb-20, 2:24 pm)
Tanglish : aval
பார்வை : 168

மேலே