மீண்டுமொரு காதல்கவிதை
மேகத்தில் ஒளிந்த நிலவு
தலைகாட்டிச்சிரித்ததடி
தாகத்தில் தவித்த மனது
மழையள்ளிக்குடித்ததடி
ஏனிந்த தவக்காலப்பிரிவு
என்றே
காலமெனைக்கொல்லுதடி
கடுங்கோடைகண்ட நிலம் பெற்ற
மறுதுளியாய்
மகிழ்விங்கே துளிர்க்குதடி
நீ தந்த கனவும்
நீ தந்த உணர்வும்
பொய்யாகிப்போகுமோ அந்தோ
எனக்கொஞ்சம் கலங்கியதே உள்ளம்
மாயமானெனவே மறைந்திருந்து வந்தாய்
மறுகணத்தில் பூத்ததடி நெஞ்சம்
இது மடிமீது நான்கண்ட சொர்க்கம்
Rafiq