பெண்ணே
நீ உருமாற்றிக்கொள்கிறாய் என்னை..
உனக்குத்தேவையான பொழுது வைத்துவிளையாடும் பொம்மைபோல்
கைகளுக்குள் ஒளித்துக்கொள்கிறாய்..
உன்னுடனான நட்பிற்கு முன்
கடந்து சென்ற பல வருடங்கள்
வீணானதாகவே தோன்றுகிறது
நீ உணர்ந்ததுண்டா?
நம்முடைய நட்பு
திசையறியா பறவைபோல அலைந்துகொண்டிருப்பதை..
ஓய்வெடுக்கும் கிளைகளோ பசியாற்ற கனிகளோ அப்பறவைக்கு கிடைப்பதில்லை
நம்முடைய தொலைதூர இடைவெளிகளில்
கற்பனைகளையும் பேரன்பையும்
இட்டுநிரப்பி
பத்திரமாய் பாதுகாத்துக்கொண்டுள்ளோம்
உன்னைப்பொருத்தவரையில்
நான்
நீ எவ்வாறு நினைக்கிறாயோ
அவ்வாறாகிறேன்
அதில்தான்
ஒர் அன்பு நிலைத்து வளர்கிறது
எப்போதும் உனது மறதிகளில் கூட
சில நினைவுகளை பதித்துக்கொள்
ஏனென்றால்
நீ என்னை உருமாற்றிக்கொண்டே இருக்கிறாய்
சமயங்களில் எனக்கே என்னை
மறந்துவிடுகிறது.
Rafiq