I Hate You
I Hate You
என்றுதான் தினமும் ஆரம்பிக்கிறாய்
உனது வெறுப்பினை ரசித்துக்கொண்டே
உரையாடத்துவங்குகிறேன்
தினமும் வெறுப்பதற்கு நீ
தயங்குவதே இல்லை..
வெறுத்துக்கொண்டே சிரிக்கிறாய்
காதலில்லாக்காதலடி உனது..
அற்புதத்தின் அதிசயம்
உன்னால் நிகழ்கிறது..
நிமிடங்களெல்லாம் உன்நினைவில் கழிய
கசிந்துவிடாமல் சேமிக்கிறேன்
உனது காதலை..
Rafiq