படத்திற்கு ஹைக்கூ கவிஞர் இரா இரவி

படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

மனிதனாக மாறவில்லை நல்ல வேளை
மாறியிருந்தால் வந்திருக்கும்
கொரோனா !

ஆறறிவு பெற்ற மனிதன்
ஐந்தறிவு பெற்ற
எங்களுக்கும் கீழ் !

ஊரடங்கு
உங்களுக்குத்தான்
எங்களுக்கு இல்லை !

மனிதக்குரங்கு என்று
பெயர் வைத்ததற்கு
கண்டனம் !

மனிதனைப் போல
மோசமானவர்கள்
நாங்கள் இல்லை !

எழுதியவர் : கவிஞர் இரா .இரவி (1-Apr-20, 4:32 pm)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 155

மேலே