கண்ணீரில் கரையும் நாட்களுடன்😭

எல்லாம் சுகமாகும்
என ஈன்றாள்
தாய் இவனை...😍

கனவுகள் பல
சுமந்து துடங்கினான்
வாழ்வுதனை...🙄

காலங்கள் கடந்தோட
திரும்பி பார்க்க..., வந்த
பாதை அத்தனையும் வேதனை..😞

தொழுது நின்றும், பிறர்
துயர் துடைத்து நின்றும் ஈசன்
தந்தது என்னவோ வெறும் சோதனை😢...

உன் வாழ்வு இதுதான்!!சிலருக்கு
இன்பம் வெறும் சொல்தான்
என்பது வாழ்வு தரும் போதனை..😱

அவமானம், தோல்வி, நிராகரிப்பு, ஏமாற்றம்,கண்ணீர் இவ்ஐவர்
என்றும் நீங்காத இவனது துணை..😲

கடந்த மணித்துளிகள் பல
கண்ணீர்த் துளிகள் என மாற
கடக்கும் மணித்துளிகள் ஏக்கம் என ஓட
வரும் மணித்துளிகள் எடுத்துவரும் மரணம் தொடுமுன்னேனும்
கனவு மெயப்பட வாழ்வேனோ..??
இல்லை
வந்த சுவடின்றி போவெனோ??

கண்ணீரில் கரையும் நாட்களுடன்😭

என்றும்...என்றென்றும்...
ஜீவன்

எழுதியவர் : ஜீவன் (2-Apr-20, 4:38 am)
பார்வை : 319

மேலே