விழி நீர்
விழி நீர்💧
**************
நினைக்கிறேன்!
உனது நிழல்,
என தருகில்...
நிகழ்ந்ததே சுகம்!
சொல்கிறேன்!
வருந்தாதே யென,
என்னிடம்...
வலிக்குதே மனம்!❣️
அழுகிறேன்!
தினம்,
உனைப் பிரிந்து...
வழியுதே விழிநீர்
தனியாய் தினம்!
தவிக்கிறேன்!
தவியாய் இன்று,
உனை
நினைத்து தானே...
என் அன்பே!
- ச.கி
ஏதேதோ சூழலினால் அன்பானவரைப் பிரிந்து,
தனிமையில் தவிக்கும் உள்ளங்களுக்காக
இக்கவிதை சமர்ப்பணம்! 💓💗💖