காதலை சொல்லடி

💕💖காதலை சொல்லடி! 💕💖
******************
வெண் காகிதம்
கறை பட
எழுதுகிறேன்,
என் காதலை!
விடை சொல்
வினாவே!
புற்று ஈசல்
போலே
திரிகிறேன்!
சொல்லிடு, உன்
மழைக் காலம்!
நான் மடியும்
முன்னே!
கடலிலே
நீந்துகிறேன்!
என் கனவிலே,
காப்பாற்ற
ஒரு நொடி,
உன் கண்
அசைவிலே!
கண்ணீரிலே
கரையாத
உன் மனம்!
செந்நீரிலே
கரையுமோ?
என் காதலே!💓