கரைந்து போன சந்தோஷம் 😂
கரைந்து போன சந்தோஷம் 😂
விடுமுறைக்கு தாத்தா பாட்டி வீடு
அழகிய கிராமம்
அன்பான மக்கள்
விளையாட சினேகிதர்கள்
பக்கத்து வீட்டு லட்சுமி
எதிர் வீட்டு கமலா டீச்சர்
மூளை வீடு
உப்புகார வீடு
நாட்டாண்மை கார் வீடு
முடி வெட்ட வீட்டுக்கு வரும் வீராசாமி
பச்சை பசேல் வயல்வெளி
பம்புசெட்
ஆனந்த குளியல்
குட்டாஞ்சோறு
நுங்கு வண்டி
கைகள் டயர் வண்டி
பாண்டி ஆட்டம்
திருடன் போலீஸ்
கண்ணாமூச்சி
உண்டி கோலில்
ஓனான் அடித்தல்
கமற்கட்டு
பழைய சோறு
பச்சை மிளகாய்
கேப்பை களி
கம்மங்கூழ்
கருவாடு துண்டு
கோயில் திருவிழா
பஞ்சு மிட்டாய்
வாட்சு மிட்டாய்
பிப்பீ
கரகாட்டம்
ஒயிலாட்டம்
டெண்ட்டு கொட்டா
எம்.ஜி. ஆர் படம்
காய்சல்
பாட்டியின் கசப்பான கசாயம்
பாட்டியின் அன்பு மடி
பிள்ளையார் கோயில்
ஆலமரம் நிழல்
மல்லாட்டை
வள்ளிகிழங்கு
எண்ணெய் குளியல்
தடபுலான விருந்து
நாட்டு கோழி முட்டை
வெட கோழி கறி
குறும்பாடு
வடை பாயாசம்
கத்திரி சாம்பார்
வந்த குழம்பு
முருகன் கோயில்
மொட்டை
தலையில் சந்தனம்
சந்தை
நியாயமான பேரம்
பாட்டி வாங்கி தந்த
புது சட்டை
இடுப்பில் நிக்காத
கால் சட்டை
அப்பா தீடிர் வருகை
மனமில்லாமல்
தாத்தா பாட்டியை
பிரித்து
அழுது கொண்டே
மீண்டும் சென்னைக்கு....
வருமா அந்த இனிய
நாட்கள்
கோடி கொடுத்தாலும் கிடைக்காத அந்த அருமையான நாட்கள்
நினைக்க, நினைக்க
நேஞ்சாங்கூடு .....😂😂
- பாலு.